வானம் பார்த்த பூமியில் இருபோகம் விளைவித்து சாதனை

வேப்பங்குளம்

சிவகங்கை மாவட்டத்தில் வறண்ட பூமியாய் இருந்த வேப்பங்குளத்தில் நீர்மேலாண்மை ஏற்படுதியதை ஏற்கனவே பார்த்தோம்.

முந்தைய செய்தியை படிக்க

மேலும் தொடர்ந்தார் திருச்செல்வம்ராமு….

17 கிலோ மீட்டர் நீர்வரத்து கால்வாயை மேம்படுத்தி,நான்கு கண்மாய்களை ஊர் பொதுமக்களே சொந்த செலவில் செப்பனிட்டனர்.

மழைக்காலமும் வந்தது.

பாய்ந்து வந்த மழைநீர் 17 கிலோ மீட்டர் கால்வாய் வழியாக நான்கு கண்மாயை வந்தடைந்தது.

முதல் ஆண்டு மழையில் இரண்டு கண்மாய்களில் மறுகால் போனது,இரண்டு கண்மாய்களில் பாதி அளவிற்கும் மேல் தண்ணீர் நிறைந்தது.

விவசாய மேலாண்மை

நீர்மேலாண்மை வேளாண்மைக்கு எவ்வளவு அவசியமோ…அதுபோல,விவசாய மேலாண்மையும் முக்கியம்.

மண்ணின் தன்மை ஆராயப்பட்டது,அதனை மேம்படுத்த வேண்டிய ஊட்ட சத்துக்கள் அடங்கிய இயற்கை உரங்கள் இடப்பட்டன.

வேளாண்மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பல ஆண்டுகள் நெல்லே விழைவிக்காத வேப்பங்குளத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நெல் பயிரிடப்பட்டது.

நெல் அறுவடை முடித்து, கோடை கால பயிரும் விளைவிக்கப்பட்டது.

இரண்டாம் ஆண்டில் நான்கு கண்மாய்களும் நிறைந்தன.

மாவட்ட ஆட்சியரும்,வேளாண் அதிகாரிகளும் பல விதங்களில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் என்றார் கணினி பொறியாளர் திருச்செல்வம்ராமு.

விளைந்த பொருட்களை விற்பதற்கான வழிமுறை எப்படி என்பதை அடுத்துப் பார்ப்போம்

Also Read  உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்