ஊராட்சியின் தேவைகளும் – இணைப்பு பாலமும்

தேவையும்- சேவையும்

தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மட்டுமே. மற்ற ஊராட்சிகள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி இல்லாமல் திணறுவதே உண்மை நிலை ஆகும்.

ஒரு ஊராட்சியில் நீண்டகால பயன்பாட்டுக்கு தேவையான ஒரு திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை உள்ளதென்றால், அதனை சேவை உள்ளம் கொண்ட தனி மனிதரிடமோ,நிறுவனம் மற்றும் அறக்கட்டளை மூலமாகவோ நிறைவேற்றிட, ஊராட்சிக்கும் அந்த நல்ல உள்ளத்திற்கும் இணைப்பு பாலமாக செயல்படுவதே நமது இணைய தளத்தின் லட்சியம்.

இணைப்பு பாலம்

ஊராட்சிகளின் அத்யாவசிய தேவைக்கான திட்டத்தை செய்தியாக வெளியிடுவது மட்டுமல்ல, அதனை நல்ல உள்ளம் படைத்த நபர்களிடம் கொண்டு சேர்த்து செயல்படுத்திட அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

நமது செய்தி இணைய தளத்தின் ஆலோசகர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில், பல்வேறு நண்பர்களிடம் நட்பு கொண்டவர்கள். இந்த நல்ல முயற்சிகளுக்கு அனைவரும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளோம்.

ஆகவே…உங்கள் ஊராட்சிகளின் தேவைகளை எங்களுக்கு அனுப்புங்கள். அதனை நிறைவேற்றும் இணைப்பு பாலமாக இணைய தளத்தில் செய்தி தளம் செயல்படும்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:-

tnpanchayat@gmail.com

Also Read  கொரோனா விழிப்புணர்வு-ஜான்போஸ்கோபிரகாஷ் அழைப்பு

அல்லது

கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

https://surveyheart.com/form/64a529bad21e105de09901c8