சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி ஒன்றியம்
முத்தூர் ஊராட்சி
முத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் கட்டனூர் , வட கடுக்கை தென் கடுக்கை ,முத்தூர் முத்தூர் ஆ.தி.காலனி, மரைக்கான் குடியிருப்பு கிராமங்களை சார்ந்த சுமார் 66 பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்
இப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் மிகவும் கஷ்ட்டப்படக்கூடிய குடும்பங்களில் இருந்து வரக்கூடியவர்கள்
இப்பள்ளியில் குடிநீர் கிடைக்க சிரமபடுகின்றனர்
பள்ளி வளாகத்திலே ஊராட்சியின் மூலம் போர் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அது குடிக்க உகந்ததாக இல்லை
எனவே சுத்திகரிக்கப்பட் குடிநீர் நிலையம் அமைத்து பள்ளி மாணவ மாணவிகளின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வழிவகை செய்யவும்.
2.இவ்வூராட்சியில் அமைத்துள்ள கிராமம் நரிப்பொட்டல்
இக்கிராமத்தில் சுமார் 25 வீடுகள் 80 பொது மக்கள் வசித்து வருகின்றன்றனர் இவர்களில் பெரும்பாளோர் முதியவர்கள் மற்றும் பெண்களே இங்கு குடிநீருக்கு சிரமபடுகின்றனர்
ஊராட்சியின் மூலம் 3 போர்கள் போடப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது ஆனால் குடிக்க உகந்ததாக இல்லை
எனவே இம்மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில்
சுத்திகரிக்கப்பட் குடிநீர் நிலையம் அமைத்து இம்மக்களில் வாழ்வில் ஒளி ஏற்படுத்தவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும் வழிவகை செய்யவும்.
அன்புடன்
அ.பாக்கியராஜ்
ஊராட்சி செயலாளர்
முத்தூர் ஊராட்சி
இந்த கோரிக்கைகளை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அறக்கட்டளை நடத்தும் நண்பர் ஒருவரிடமும் நாம் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.
நமது இணைப்பு பாலம் மூலமாக இது போன்ற செயல்களை தொடர்ந்து செயல் படுத்திட உள்ளோம். நிதி வருவாய் இல்லாத ஊராட்சிகளின் தேவையினை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விவரங்களை பதிவிடவும்.
https://surveyheart.com/form/64a529bad21e105de09901c8