மூத்த பத்திரிகையாளர். வேளாண்மை பட்டதாரி.அரசு பணியில் சேர்ந்து,ஊடகத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். எம்ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலலிதா என்று மூன்று முதல்வர்களோடும் பழகியவர்.
தேர்தல் கருத்துக்கணிப்பை தமிழ் பத்திகை உலகில் அறிமுகம் செய்தவர். தராசு மக்கள் மன்றம் என்று அரசியல் கட்சிகளுக்கே சவால் விடும் வகையில் 90 களில் தமிழ்நாட்டில் வலம் வந்தவர். புதிதாக வரும் தொழில்நுட்பங்களில் இணைந்து கொள்ளும் எழுபதை தொடும் இளைஞர்.
எழுத்தாளர். வருமான வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது தீரா காதல் கொண்டவர். பல பயனுள்ள புத்தகங்களை எழுதி உள்ளார். மிகச் சிறந்த கல்வியாளர். போட்டித் தேர்வு பயிற்சியாளர். ஏழை மாணக்கர்கள் கல்வி பெற்று உயர்நிலை சென்றிட வேண்டுமென்ற சீரிய சிந்தனைக்கு சொந்தக்காரர்.
மூத்த பத்திரியாளர். தமிழ்தேசிய உணர்வாளர். தனது மகனுக்கு தமிழ்ஈழம் என பெயரிட்டவர். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வழிகாட்டி.
தலைவர்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
தமிழ்நாடு பஞ்சாயத்து செய்திகள்
இதுவரை யாரும் எடுத்திராத முயற்சியை ஆரம்பித்துள்ளோம். கிராம ஊரக மூன்றடுக்கு முறையில் பஞ்சாயத்து,ஒன்றிய அமைப்பு,மாவட்ட பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தரும் சிறப்பு இணையத்தளமாக திகழும்.
எங்கள் குழுவில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கும்,மக்களுக்கும் மற்றும் அரசிற்கும் இணைப்பு பாலமாக இந்த இணையம் செயல்படும்.
உள்ளூர் நிகழ்வை உலகெங்கும் கொண்டு செல்லும் பணியை தொடர்ந்து செயல்படுத்துவோம்.
நல்லதை வாழ்த்துவோம்…தவறென்றால் தட்டிக்கேட்போம்.
ஜோதிமுருகன்
இணையத்தள ஆசிரியர்
பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி செய்திகளை மட்டுமே தரும் tntownpanchayat.com எனும் இணையத்தளம் உதயமாகி உள்ளது.