ஊராட்சி செயலர்களை சமூக தணிக்கை நிதி இழப்புகளுக்கு பொறுப்பாக்குவதை திரும்ப பெற வேண்டும்-மாநில தலைவர் தமிழக அரசிற்கு கடிதம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..

கிராம ஊராட்சிகளில் சிறப்புடன் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஆவணங்களை சமூக தணிக்கை குழு ஆய்வு செய்து நிதி இழப்பு தொடர்பான பத்திகளை எழுப்பி அத்தொகைக்கு ஊராட்சி செயலாளர்கள் பொறுப்பாக்கப்படுகின்றனர்..

கிராம ஊராட்சயின் MGNREGS பதிவேடுகளை பராமரித்து வருவதற்கு அரசாணை எண்:-101,RD&PR(CGS1)நாள்10.07.2015 ன்படி ஒவ்வொரு மாதமும் ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பூதியமாக ரூ 1000 கடந்த 26.10.2018 வரை வழங்கப்பட்டு வந்தது..அக்கால கட்டத்தில் ஏற்பட்ட நிதி தொடர்பான இழப்புகளுக்கு ஊராட்சி செயலர்கள் முழுப்பொறுப்பாக்கப்பட்டனர்..ஊராட்சி செயலர்கள் பல்வேறு இடர்பாடான பணிச்சூழலிலும் இப்பணியை மிக துயரத்தோடு செய்துவந்தனர்

ஆனால் கடந்த 26.10.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்:-420 மூலம் ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பூதியம் ரத்து செய்யப்பட்டு புதியதாக வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் உருவாக்கப்பட்டன..

அதனடிப்படையில் அரசாணை எண்:-66,ஊவ(ம)ஊது(ம.அ.தி.1)துறை,நாள்:-02.06.2022 மற்றும் ஊரகவளர்ச்சித்துறை இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்:-27392/2018/MGNREGS-01,நாள்:-07.06.2022 படி ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்..

அப்பணியிடத்தில் அனைவரும் சேர்ந்து தற்போது பணியாற்றி வரும் நிலையில் மீண்டும் நிதி இழப்புகள் தொடர்பாக ஊராட்சி செயலர்கள் பொறுப்பாக்கப்படுவது மிக வேதனையளிப்பதாக உள்ளது

Also Read  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்,மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களும் அரசின் உயர் அலுவலர் பெருமக்களும் இப்பிரச்சனையை சிறப்பினமாக கருதி சமூக தணிக்கை இழப்புகளுக்கு பொறுப்பாக்கும் பழைய விதிமுறைகளை மாற்றியமைத்திட கனிவுடன் வேண்டுகிறோம்.இந்நிலை தொடர்ந்தால் அமைப்பு போராட்ட களத்தில் குதிக்கும் நிலை ஏற்படும்..

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்..