சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட
1) புளியம்பட்டி
2) கொல்லப்பட்டி
3) வெள்ளாளப்பட்டி
4) சங்கீதபட்டி
5)சாமிநாயக்கன்பட்டி
6) கோட்டகவுண்டம்பட்டி
7) எட்டிகுட்டைபட்டி
8) நாரயணம்பாளையம்
ஆகிய ஊராட்சிகளில்,
மாவட்ட ஆட்சிதலைவர் பெயரில் நிர்வகிக்கும் கணக்கான தமிழ்நாடு மின்சார வாரியம் / தமிழ்நாடு குடிநீர் வாரியம் இந்த கணக்கில் மேற்கொள்ளப்படும் செலவினமான மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டிய கணக்கில்,
இவ்வட்டாரத்தில் மட்டும் மேற்கானும் பஞ்சாயத்துகளில், தனிநபருக்கு பொய்யான பெயர்களில் தொகையினை மாற்றி சுமார் 4 கோடி அளவில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளது.
இதில் 2017 ஆம் ஆண்டு தனி அலுவலர் காலத்திலும் மற்றும் தற்போது வரை இந்த ஊழல் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து நிலைபணியாளர்களுமே அடங்குவர். இதில் தற்போது பதிவிஉயர்வில் உதவி இயக்குனர் அலகில் கூட சென்றும், மேலும் தற்போது மாவட்ட அளவில் உயர் பதவியிலும் வசித்து வருகிறார்கள்…
இவர்களால் தான் இது போன்ற பெரிய அளவிலான ஊழலையும் மூடிமறைத்து மாவட்ட நிர்வாகத்தினை ஏமாற்றி வருகின்றனர்..
எனவே இது போன்ற மாபெரும் ஊழல் குறித்து மாவட்ட நிர்வாகம் செவிசாய்குமா ???
அல்லது ஊழல் பெருசாளிகளுக்கு துணை நிற்குமா ??
பொறுத்திருந்து பார்போம்…
இது நமக்கு கிடைத்துள்ள உண்மை. ஊழலின் உண்மை நிலையை ஆராய நமது நிருபர் களம் இறங்கி உள்ளார். ஆதாரங்களோடு அடுத்தடுத்து செய்திகள் வெளியாகும். சம்மந்தபட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டோம்..