அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

அல்லி

அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.

அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.

200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம், சிறுநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.

அல்லி கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம்  ஆகியவை குணமாகும்.

 

எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

Also Read  காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்...!!