அரைக்கீரை – உணவே மருந்து தினமும் அருந்து

நன்மைகள்

அரைக்கீரையில் தங்கச்சத்து மற்றும் இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

மேலும், சுண்ணாம்புச்சத்து 364 மி.கி, மணிச்சத்து 52 மி.கி மற்றும் புரதச்சத்து 38.5 மில்லிகிராமும் உள்ளன.

இக்கீரை மருத்துவத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.

அரைக்கீரை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

பிடரி நரம்பு வலித்தல், மண்டை பீனிச நரம்புவலி, ஜன்னித்  தலைவலி, கன்னநரம்பு புடைப்பு ஆகியவைகளுக்கு இக்கீரை பெருங்குணமளிக்க வல்லது.

குளிர்சுரம், வாதசுரங்கள், கபசுரம், சளி இருமல் ஆகியவைகளை அரைக்கீரை போக்கும் குணமுடையது.

இக் கீரை உடலுக்கு  வெப்பத்தைத் தந்து சப்த தாதுக்களையும் வலுவடையச் செய்யும். இக்கீரை சுக்கில தாதுவை வலுப்படுத்தி உடல்பலத்தைப் பெருக்குவதில்  தூதுவளைக் கீரைக்கு நிகரானது.

உடலில் தேங்கும் வாய்வு, வாத நீர்களைப் போக்குவதில் முருங்கைக் கீரைக்கு சமமானது. நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும் பலனும் தரக்கூடியது.

அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும்.

மாதவிடாய் காலத்தில் பெண்ணுடன் சேர்ந்த சேர்க்கையால் வரும் சூதக ஜன்னிக் கோளாறுகளை அரைக்கீரையின் மூலம் குணமாக்கிக்  கொள்ளலாம்.

தீயவழிகளில் உடல் சக்தியை இழந்தவர்களுக்கு இக்கீரை அரும் மருந்தாகவும், உற்றுழி உதவும் நண்பனாகவும் திகழ்கிறது.

Also Read  வெற்றிலை- இதற்கு ஈடில்லை

அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பதும் உண்டு. நாட்பட்ட நோய்களையும் அரைக்கீரை விதையில் சிறுகச் சிறுகக்  குணப்படுத்திவிடலாம்.

அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கீரைத் தைலம் மிகவும் புகழ்பெற்ற தைலமாகும். இத்தைலம் கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது.

.தலைமுடியானது செழித்து வளர இத்தைலமும் உதவுகிறது. மேலும் தலைமுடியும் ஒளிவிட்டு மின்னும்.

தலைமுடி கருமையாகவும் செழிப்பாகவும் வளர்வதற்கு, அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சிப் பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவிவர வேண்டும்.

ஆகவே நமது நாட்டு மூலிகை வளங்களை நன்கு பயன் படுத்தி ஆங்கில மருந்துகளை அரவே தவிர்த்து,  உணவே மருந்தாக உண்டு  என்றென்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்…!

நோய் வரும் முன் காக்காப்பது சிறப்பு வந்த பின் பாக்கலாம் என்றால் அது மருத்துவருக்கு சிறப்பு…

எனவே
“உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையிலே”
அன்புடன் உங்கள் சங்கரமூர்த்தி..
7373141119