சிக்கிம் – நாம் சமீபத்தில் கேள்விப்பட்டு / நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், ஒரு மாநிலமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது தான்..
அது வேறு எந்த நாட்டிலும் அல்ல, நம் இந்தியாவில் இமய மலைத்தொடரில் அமைந்த உள்ள சிக்கிம் மாநிலத்தில் தான்..
இதற்கான பின்புலங்களை ஆராயும் போது , ஒரு மிகப் பெரிய உண்மை கண்டறியப்பட்டது.
தனி நாடாக விளங்கிய சிக்கிம், பாதுகாப்பு காரணங்களால் 1975ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும்.
நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
சிக்கிம் இப்பொழுது இந்தியாவின் முதல் 100% ஆர்கானிக் மாநிலம். நீங்கள் நம்பினால் நம்புங்கள்!
இந்தியாவின் எந்தவொரு மாநிலங்களும் தங்களால் செய்ய முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்ட ஒன்றை, இந்தியாவின் கிழக்கு மூலையில் அடங்கிப் போயிருக்கும் இந்த குறுகிய நிலப்பிரதேசமான சிக்கிம் நிறைவேற்றி இருக்கிறது!
ஹிமாலய மலைகளின் இடுக்கில், ஆறு லட்சம் மக்கள் வசிக்கும் இந்த “மலர்களின் நிலத்தில்” இதுவரை ஒரு ரயிலோ, கமர்ஷியல் விமானமோ எட்டிக்கூட பார்த்ததில்லை.
ஆனாலும் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு, தங்கள் முழு நிலப்பிரதேசங்களையும் முற்றிலும் ரசாயன மற்றும் செயற்கை உரங்கள் அற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறது அரசு.
கிட்டத்தட்ட கடந்த 33 ஆண்டுகளாக முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் மட்டுமே அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அம்மாநில மக்கள் முழுமையாக இயற்கை விவசாயப் பொருட்களை மட்டுமே. பயன்படுத்தி வருகிறார்கள்.
உணவே மருந்து என கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் அந்த உணவே பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், செயற்கை உரங்களாலும் விஷமாகிப்போன இக்காலகட்டத்தில், மக்களை அவர்கள் உண்ணும் உணவே மருந்தாக்கி காப்பாற்றி இருக்கிறது என்பது நாம். காணும் கண்கூடான உண்மை..
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் கூறியது போல. எந்த நாட்டில் இயற்கை விவசாயம் தழைத்தோங்குகிறதோ , அந்த நாட்டில் மருத்துவமனைகள் தேவையற்றுப் போகும் என்ற கூற்று , .இன்று சிக்கிம் மாநிலத்தில் நிஜமாகி உலா வருகிறது..
2046 ஆம் ஆண்டு வரை, அம்மாநிலத்தில் விளையும் இயற்கை விவசாயப் பொருட்களுக்கு , உலகச்சந்தையில் வணிக முன்ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்பது கூடுதலான ஆச்சர்ய தகவல்..
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு