நூறுநாள் திட்ட ஊழலுக்கு யார் பொறுப்பு?

பணி நாட்கள்… பணியாட்கள்

ஒரு  ஊராட்சியில் இன்று( 6.7.23)தேசிய ஊரக உறுதி திட்டம் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது 72 பணியாளர்கள் மட்டுமே பணித்தளத்தில் இருந்தனர். 72 பணியாளர்களின் வேலை அடையாள அட்டைகள் மட்டுமே இருந்தது. ஆனால் இன்று காலையில் 102 பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாக அலுவலகத்திற்கு வருகை தரப்பட்டுள்ளது.

பணித்தளத்தில் இல்லாத 30 பணியாளர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டு இந்த வாரம் முழுக்க அவர்கள் வேலையில் ஈடுபடுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாக செய்தி நமக்கு கிடைத்தது.

எந்த ஊராட்சி என்பதை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ளோம். இந்த தவறுக்கு முழு பொறுப்பு யார்? உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஊரக வளர்ச்சி பல்வேறு வகையான புதிய புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. எப்படியோ…ஊழலை தடுத்தால் சரி.

Also Read  குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..!