முதலமைச்சருக்கு ஊரக வளர்ச்சி துறை அனைத்துப்பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை

தமிழக முதல்வருக்கு கோரிக்கை

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறை அனைத்துப்பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை…

தமிழ் நாட்டில் ஊரக வளர்ச்சி துறையில் 12524 கிராம ஊராட்சிகள் உள்ளன .அதில் 50000 கிராமங்கள் உள்ளன.

அனைத்து கிராமத்திற்கும் கொரானா தடுப்பு பணிகளை
தூய்மை காவலர்கள், துப்புரவுபணியாளர்கள் .ஓ.எச்.டி.ஆப்ரேட்டர்கள்,ஊராட்சி செயலாளர்கள். ஊராட்சி மன்ற தலைவர்கள் தினமும் காலை முதல் இரவு வரை செய்து வருகின்றனர்.

அந்தப்பணிகளை இளநிலை உதவியாளர் உதவியாளர் சாலை ஆய்வாளர்கள் பணிமேற்வையாளர்கள் மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து களப்பணியாற்றி வருகின்றனர்.

உதவி இயக்குனர்கள்,திட்ட இயக்குனர்கள் தினந்தோறும் கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த பணிகளை செய்யும் அலுவர்களுக்கு மருத்துவத்துறைக்கு வழங்குவதைப்போல் ஒரு மாதச்சம்பளம் கூடுதலாக வழங்க வேண்டும்.

குறைந்த சம்பளம் பெறும் தூய்மை காவலர்கள் துப்புரவுபணியாளர்கள் .ஓ.எச்.டி.இயக்குனர் களுக்கு 10000 சம்பளம் வழங்க வேண்டும்.

இந்த துறையில் பணியாற்றும் 55வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஊராட்சி செயலர் ஒருவரின் கடிதம்