தமிழக அரசுக்கு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் நன்றி

ஐம்பது லட்சம்

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் R.சார்லஸ் ரெங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

கொரனா தொற்றுநோய் உலகையே அச்சுறுத்திவரும் இச்சூழலில் ஊரகவளர்ச்சித்துறையில் திட்ட இயக்குநர்கள்,உதவி இயக்குநர்கள்,வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்,பொறியாளர்கள்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பணிமேற்பார்வையாளர்கள்,உதவியாளர்கள்,இளநிலை உதவியாளர்கள்,ஈப்பு ஓட்டுநர்கள்,மாவட்ட/வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள்,அலுவலக உதவியாளர்கள்,கணினி உதவியாளர்கள் என அலுவலர்களும்,கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள்,தூய்மை பணியாளர்கள்,மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள்,தூய்மை காவலர்கள் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்களும் இரவு பகல் பாராது கடுமையான களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகமெங்கும் உள்ள 12524 ஊராட்சிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பது,குப்பைகளை தூர்வாருவது,தடைபடாத குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகளை கிஞ்சிற்றும் தயங்காது,கண் அயராது பாடுபட்டு வரும் இத்துறையின் அலுவலர்களுக்கும்,பணியாளர்களுக்கும் இன்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் பல அறிவிப்புகள் செய்துள்ளதனை நன்றியோடு வரவேற்கிறோம்.

வேலைவாய்ப்பு

அதிலும் குறிப்பாக பணியில் உள்ளவர்களுக்கு கொரனா சிகிச்சையளிக்க நிதி உதவியும்,சிகிச்சையின்போது இறப்பு ஏற்படின் 50 லட்ச ரூபாய் நிதி உதவியும்,அலுவலர் மற்றும் பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது மிக ஊக்கத்தை தருகிறது.

மேலும் இறப்பிற்கு பிறகு உரிய மரியாதையும்,விருதுகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது மேலும் ஊக்கப்படுத்துகிறது.

சீரிய பல உத்தரவுகளை பிறப்பித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும்,மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கும்,மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

Also Read  முதல்வரும்- ஊராட்சி தலைவரும்..ஓர் ஒப்பீடு

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.