ஆலத்தூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

ஆலத்தூர்/Alathur

ஆலத்தூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 18 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலத்தூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…ஆலத்தூர்  என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

ஆலத்தூர் ஊராட்சி

 1. அனக்காவூர் ஒன்றியம்- திருவண்ணாமலை
 2. அன்னவாசல் ஒன்றியம் – புதுக்கோட்டை
 3. அவிநாசி ஒன்றியம் – திருப்பூர்
 4. பவானி ஒன்றியம் – ஈரோடு
 5. கள்ளக்குறிச்சி ஒன்றியம் – கள்ளக்குறிச்சி
 6. குடவாசல் ஒன்றியம் – திருவாரூர்
 7. கோலியனூர் ஒன்றியம் – விழுப்புரம்
 8. மதுக்கூர் ஒன்றியம் – தஞ்சாவூர்.
 9. மதுரை மேற்கு ஒன்றியம் – மதுரை
 10. மங்களூர் ஒன்றியம் – கடலூர்
 11. மரக்காணம் ஒன்றியம் – விழுப்புரம்
 12. நரிக்குடி ஒன்றியம் – விருதுநகர்.
 13. சங்ககிரி ஒன்றியம் – சேலம்
 14. திருமருகால் ஒன்றியம் – நாகப்பட்டினம்
 15. திருப்போரூர் ஒன்றியம் – செங்கல்பட்டு
 16. திருவெறும்பூர் ஒன்றியம் – திருச்சி
 17. தோகைமலை ஒன்றியம் – கரூர்
 18. வில்லிவாக்கம் ஒன்றியம் – திருவள்ளூர்

இதுபோல தமிழ்நாட்டில் ஒரே பெயரில் உள்ள ஊராட்சிகள் பற்றி தினம் ஒரு செய்தியாக நமது இணைய தளத்தில் வரும்.

                          -நாளை மற்றொரு ஊராட்சி-

Also Read  இந்த ஊராட்சியில் இந்த சிறப்புகள்