பொறுப்பேற்றார் பொன்னையா இஆப

ஊரக வளர்ச்சித்துறை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநராக  P. பொன்னையா இ.ஆ.ப அவர்கள் இன்று பதவி ஏற்று கொண்டார்.

தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளின் உண்மை நிலையை அனைத்தும் அறிந்துள்ள ஒருவர் துறையின் இயக்குநராக பதவி ஏற்றுள்ளதை நாம் மனதார வரவேற்கிறோம்.

பஞ்சாயத்துராஜ் அதிகாரம் பறிபோகிறது என ஊராட்சி தலைவர்களின் உள்ளக்குமுறல், பணிவரன்முறை அரசாணையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் பல்வேறு நிலை ஊழியர்களின் பிரச்சனைகள் என பல்வேறு விசயங்கள் உள்ளன.

ஆகச்சிறந்த ஆளுமை கொண்ட இயக்குநர் அவர்கள், அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே நமது இணைய செய்தி தளத்தின் கோரிக்கையும் ஆகும்..

Also Read  கோவிந்தபுரம்- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!