மகளிர் உரிமை தொகை – ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் கோரிக்கை

முதல்வருக்கு கோரிக்கை

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாதந்தோறும் ரூ 1000 வழங்கும் சிறப்புதிட்டமான கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர்-15 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதனை எங்கள் அமைப்பு நன்றியுடன் வரவேற்கிறது.இத்திட்டத்தினால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயருவதுடன்,ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

இத்திட்டத்துக்கான தகுதி வரம்புகள் வெளியிடப்பட்டதில் உள்ளாட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது..ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மாதம் ரூ 5000 க்குள் ஊதியம் வாங்கும் மேல்நிலைத்தொட்டி இயக்குவோர்,தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களின் ஆண்டு வருவாய் என்பது இத்திட்டத்தின் வரம்புத்தொகையில் பாதியளவுகூட இல்லை..எனவே ஏழை எளியோரின் பங்காளரான மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்கள் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணியாற்றிவருவோரில் ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் கடைமட்ட பணியாளர்களும் பயனடையும் வகையில் இத்திட்டத்தில் சேர்த்திட கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

ஜான்போஸ்கோ பிரகாஷ்

இவ்வாறு அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்..

Also Read  பணியை விட்டு தூக்குவோம்-பஞ்சாயத்து செயலரை மிரட்டும் இயக்கம்