சேலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சருடன் ஊரக பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்திப்பு

சந்திப்பு

ஊராக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கமும் இணைந்து வெயிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது….

சேலம் மாவட்டம்,பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு  வருகை புரிந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களை தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சேலம்.A.முருகன்,TNPSA மாநில பொருளாளர் வாழப்பாடி K.மகேஸ்வரன்,மாநில துணைச்செயலாளர் மணிவேல்,சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சிவசங்கர் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்,தூய்மை பணியாளர் ஊதிய உயர்வு அறிவிப்புகளை அரசாணையாக வெளியிடவும்,ஊராட்சி செயலருக்கு கருவூல அரசாணை வழங்கிடவும்,நிலுவையில் உள்ள பிறநிலை அலுவலர் கோரிக்கையை நிறைவேற்றித்தரவும்,உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஒருமாத கூடுதல் ஊக்க ஊதியம் வழங்கிடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனைக்கேட்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவிக்கப்பட்ட மேல்நிலைத்தொட்டி இயக்குபவர் மற்றும் தூய்மை காவலர்களுக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும்,ஊராட்சி செயலர்களுக்கான கருவூல ஆணை நிதித்துறை ஒப்புதலுக்கு சென்று திரும்பியுள்ளதாகவும்,அதனையும் விரைவில் சரி செய்து ஆணைபிறப்பிக்கப்படும் என்றும்,

அனைவரும் களப்பணியை தீவிரமாக ஆற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன்,உள்ளாட்சித்துறையினருக்கான ஒருமாத ஊதியம் எவ்வளவு வரும் என்றும் வினவியதுடன் இது குறித்து விரைவில் மாண்புமிகு முதல்வருடன் கலந்துபேசி உரிய நல் அறிவிப்பு வரும் என்றும் உறுதியளித்தார்.

Also Read  ஊராட்சித்துறை ஊழியர்களின் ஊதியம் - அரசிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வேண்டுகோள்

மேற்படி சந்திப்பின்போது மாண்புமிகு அமைச்சர் அவர்களின் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி உள்ளபடியே மிக மனநிறைவானதாகும்..நமது நிர்வாகிகளை மகிழ்வுடன் வரவேற்று நேரம் ஒதுக்கி பேசியது மிக சிறப்பான ஒன்றாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.