பாதுகாப்பு கேடயம்
தமிழ்நாடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் நமது நிருபருக்கு அளித்த பிரத்தியோகமான சிறப்பு பேட்டி…!
அதில் அவர் கூறியதாவது
12524 கிராம ஊராட்சி செயலர்களில் பெரும்பாண்மையோரை உறுப்பினராக கொண்ட மிகப்பெரிய சங்கம் எங்களது “தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்”
இந்த சங்கம் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன,
இந்த சங்கத்தில் இணைந்துள்ள அனைத்து ஊராட்சி மன்ற செயலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அமைப்பாக உருவாகியுள்ளது.
இதுவே இந்த சங்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.
பகுதிநேர எழுத்தாளர்கள் என்ற பிரிவில் இருந்த ஊராட்சி மன்ற செயல் அலுவலர்களை, அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக பல வேண்டுகோள்களை விடுத்திருந்தோம்.
கடந்த 2. 12 . 2018 அன்று எங்களது மகாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த உள்ளாட்சித்தறை அமைச்சர் வேலுமணி அவர்கள், மாநாடு மேடையிலேயே, அரசு ஊழியர்களுக்கு இனையாக எங்களை காலமுறை ஊதியர் என்று நிர்ணயித்து அறிவித்தது, மிகவும் போற்றக்கூடிய ஒரு செயலாக அமைந்தது என்று தங்களது சங்கத்தைப் பற்றி பெருமைப்பட கூறினார் ஜான் பாஸ்கோ பிரகாஷ்
செய்தி தொகுப்பு:-சங்கரமூர்த்தி
7373141119