கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்

பஞ்சாயத்து தலைவர் உறுதி

கோவை மாவட்டம்

சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி   மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர்.

இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று நம்மிடம் கூறினார்.

கிட்டாம்பாளையம் ஊராட்சியை ஒரு குப்பை இல்லாத ஊராட்சியாக உருவாக்குவதே எங்களது நோக்கம்.

எங்கள் ஊராட்சி ஊழியர்கள் அனுதினமும்வீடுகள் தோறும் குப்பைகளை சேகரித்து சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

தார்சாலை காங்கீரட் சாலை அமைக்க ஒரு கோடி ரூபாய் திட்டத்தில் செயல்பட தயாராக உள்ளோம் என்றும், அவர்கள் பகுதியை சேர்ந்த ஜெட்டஆப் என்ற நிறுவனம் கிட்டாம்பாளையத்தில் பசுமை செழிக்க மரக்கன்றுகளை தந்து உதவ காத்திருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் டிஜிட்டல் லைப்ரேரி ஒன்றையும் நிறுவ நாங்கள் தயாராக உள்ளோம்.
தமிழகத்திலேயே சிறப்பான ஊராட்சி மன்றம் என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார்

Also Read  ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்