முத்துகவுண்டன்புதூரை முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவோம்

அறுதியிட்டு சொல்லும் கந்தவேல்

கோவை மாவட்டம்

சூலூர் ஒன்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துகவுண்டன் புதூர், ஊராட்சி மன்ற தலைவர் V.P.கந்தவேல் நம்மிடையே பேசியதாவது..

நமது “tnபஞ்சாயத்தின் செய்திகள்” சிறப்புடன் செயல்படுவதை பெருமையுடன் பாராட்டி வாழ்த்தி பேசினார்.

நமது ஊடகத்தின் வாயிலாக தமிழகத்திலுள்ள மற்ற பஞ்சாயத்து தலைவர்களின் அனுபவமான, சிறப்பான செயல்பாடுகளை, கண்டறிந்து மேலும் எங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருக்கும்,என்பதை குறிப்பிட்டு பேசினார்.

மேலும் அவருடைய மூன்று அடிப்படையான திட்டங்களான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாக்கடை வசதி, இந்த மூன்றையும் முன்னெடுத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களுடைய அடிப்படையான நோக்கம் என்றார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் எந்த விதமான பொறுப்புகள் இல்லாமலேயே நான் எங்கள் பகுதி மக்களுக்கு பலவிதமான அரசு உதவி திட்டங்களையும், என்னால் முடிந்த உதவிகளையும் செய்து வந்துள்ள காரணத்தால் மக்கள் என்னை இந்த முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவருக்காக தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழகத்திலேயே எங்களது முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்றம் ஒரு முன்னோடி ஊராட்சியாக திகழ வேண்டும் என்பதே எங்களது ஆசை, இதை எனது வார்டு உறுப்பினர்களுடன் கலந்து வெற்றிகரமாக செயல்பட வேண்டும், செயல்படுவேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன் என்றார்.

Also Read  பஞ்சாயத்து-கிராமசபை ௯ட்டம்