தடையில்லா குடிநீர்-பஞ்சாயத்தின் முதன்மை கடமை

ஜான்போஸ்பிரகாஷ் வேண்டுகோள்

இணையத்துக்கு வாழ்த்து

நவீன உலகில் இணைய வழி செய்திகள் மற்றும் அதன் விழிப்புணர்வு தன்மைகளைப் பற்றி நமது “tnபஞ்சாயத்து செய்திகளுக்காக” வாழ்த்து தெரிவித்து பேசினார்.

ஊராட்சி ஒன்றிய செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ்.
நமது “tn பஞ்சாயத்து செய்திகள்” வெற்றி பெறவேண்டும் என்று கூறியதோடு பஞ்சாயத்து தலைவருடைய அதிகாரம் அவர்களுடைய செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர்கள் முதலில் கிராம மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் குடிநீரில் தன்னிறைவு பெற வேண்டும் என்று கூறினார்.

மக்களுடைய கோரிக்கைகள் எல்லாம் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும்.

நீரின்றி அமையாது உலகு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு அப்படிப்பட்ட ஒரு நல்லதொரு சிறப்பான செயல் திட்டத்தை செய்ய வேண்டும்.

அதற்கு 98 சதவீதம் எங்களது அமைப்பில் உள்ள செயலாளர்கள் கண்டிப்பாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

தற்போது வீட்டு இணைப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளது அரசு.

காரணம் அந்தந்தப் பகுதி இருக்கக்கூடிய நீராதாரங்களை கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
மேலும் தெரு குழாய்களை மட்டுமே அமைக்க வேண்டும் என்று அரசு நிர்வாகம் கூறியுள்ளது.

Also Read  கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்

இருந்தபோதும் அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய நீர் ஆதார அமைப்புகளை வைத்து மாவட்ட ஆட்சியர் துணையுடன் கண்டிப்பாக முதலில் குடிநீர் குழாய் அமைப்பது தான் மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதற்கு எங்களது உள்ளாட்சி மன்றத்தின் செயலர்கள் கண்டிப்பாக, சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவேண்டிய நடவடிக்கைகளை தலைவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்றார் மாநிலத் தலைவர் ஜான் பாஸ்கோ பிரகாஷ்

செய்திதொகுப்பு:-சங்கரமூர்த்தி
7373141119