கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சி மன்ற, தேர்தலில் கடந்த மூன்று முறை நின்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போதும், இந்த முறை சுமார் 450 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக நம்மிடம் தெரிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சரவணன்.
மேலும் இவர் நம்மிடம் கூறியபோது
எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை எங்களது 9-வார்டு உறுப்பினர்களுடன் இணைந்து உடனுக்குடன் செய்ய காத்திருக்கிறோம்.
எங்களது பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஒய் பை வசதி செய்து தர காத்திருக்கிறோம்.
வீடுகள்தோறும் குடிநீர் மற்றும் தண்ணீர் பைப்புகளை கண்டிப்பாக இணைக்க தயாராக உள்ளோம் என்று கூறினார்