கருவூலம் மூலம் சம்பளம்-மாநிலத் தலைவர் சார்லஸ் கோரிக்கை

நமது “tn பஞ்சாயத்து செய்திகள்” சேனலுக்காக…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சார்லஸ் நம்மிடம் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்திலுள்ள 12524 ஊராட்சி மன்ற செயலர்கள் வாங்கும் சம்பளம் சம்பளத்தை, அரசு கருவுலகங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும், மற்றும் குடிநீர் விநியோகிக்கும் ஊழியர்கள்,  துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டு,அவர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து அமைச்சர் வேலுமணியிடம் பரிந்துரைக்க போவதாக நம்மிடம் தெரிவித்தார்.

மேலும் 28, 29 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் மாநில மாநாடு ஒன்றை நடத்த போவதாகவும், அதை தொடர்ந்து திருநெல்வேலியிலும் அதுபோன்ற ஒரு மாநாடு நடத்த போவதாகவும்,

இதற்கான தேதிகளை முதல்வரும், அமைச்சர் வேலுமணியும் ஒதுக்கிட வேண்டும் என்று நமக்களித்த பேட்டியில் தெரிவித்தார்…..!

அப்போது அவருடன் தமிழ்நாடு ஊராட்சி செயலளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ,மற்றும் மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தார்கள்….

Also Read  உள்ளாட்சி கட்டமைப்பு எப்படி?