நிதி வருமா? ஊரக வளர்ச்சித்துறை நிலை என்ன?- ஒற்றர் ஓலை

அரசு துறைகளில் மத்திய அரசின் நிதியை அதிக அளவு நம்பி உள்ள ஒரே துறை ஊரகவளர்ச்சி தானே ஒற்றரே…

ஆமாம் தலைவா…அதற்கு என்ன?

புதிய முதல்வரின் டெல்லி பயணம் வெற்றிபெறவில்லை என செய்தி வருகிறது. அதனால், மத்திய அரசின் நிதி ஊரக வளர்ச்சித்துறைக்கு வருவது சந்தேகமே என்கின்றனர் ஒற்றரே..

ஆமாம் தலைவா…நூறுநாள் வேலை திட்டம் மிகப்பெரிய சிக்கலை நோக்கி செல்லும் என்கின்றனர்.SFC இனி சரியான காலத்தில் வருமா என்பது சந்தேகம் என்கின்றனர்.முதல்வரின் பயண தோல்விக்கு பெரும் பொறுப்பு தலைமை செயலாளர் சாய்குமார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர்.

ஆமாம் ஒற்றரே…தேர்தல் காலத்தில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட தலைமை செயலாளரை மாற்றுவதற்கு புதிய அரசிற்கு தைரியம் இல்லை.

ஆகஸ்ட் மாதம் வரை இந்த சிக்கல் தொடரும் தலைவா என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  போராட்டம்,இடமாறுதல்,ஊராட்சி செயலாளர்கள் நிலை - ஒற்றர் ஓலை