வரும்முன் காப்போம்-உள்ளாட்சி அமைச்சர் வேண்டுகோள்

கொரோனா

உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவு.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அவர்களது வழிநடத்துதலின் பேரில் தமிழகத்திலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து, ‘பிளீச்சிங் பவுடர்’ தூவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் இப்பணிகளை தினந்தோறும் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

சமூக ஊடக வதந்திகளை களையும் விதமாக சுகாதாரத்துறை வரையறைக்குட்பட்டு கொரோனா நோய் அறிகுறி,பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மறு உத்தரவு வரும் வரை இவற்றை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் ௯றி உள்ளார்.

மேற்கண்ட உத்தரவினை முழுவீச்சில் செயலாக்கம் செய்திட ஒவ்வொரு ஊராட்சி செயலரையும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது என்று தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோ பிராகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read  பிரதமருக்கே முன்னோடியாய் பஞ்சாயத்து