என்னங்க சார் உங்க திட்டம்,முடங்கும் ஊரக வளரச்சி துறை – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…அதிர்ச்சிகரமான செய்தியா?

ஆமாம் தலைவா…மாவட்ட அளவில் திட்ட பணிகள் முடிந்த வேலைகளுக்கான பில்களை திட்ட இயக்குநர்கள் அனுமதிக்கலாம் என இருந்தது.அதனை மாற்றி இறுதி அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கும் வகையில் உத்தரவு இட்டுள்ளனர்.

மறுபடியும் மாவட்ட ஆட்சியர் கையில் ஊரக வளர்ச்சி துறையின் அதிகாரம் சென்றுவிட்டதா ஒற்றரே…

ஆமாம் தலைவா…பிறகு எதற்கு திட்ட இயக்குநர் என்ற பதவி என்று தெரியவில்லை. மாவட்ட அளவில் உதவி இயக்குநரோடு ஊரக வளர்ச்சி துறையின் உயர் பதவியை முடித்துவிடலாம் அல்லவா.

சரியாக சொன்னீர்கள் ஒற்றரே…

திட்ட இயக்குநர்களின் நிலையை போல,ஊரக வளர்ச்சித் துறை ஆணையரின் அதிகாரத்தை தலைமை செயலாளர் வசம் கொடுத்துவிடும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சர்யபடத் தேவையில்லை.விரைவில் ஊரக வளர்ச்சித்துறை முடங்கிவிடும் நிலையை நோக்கி செல்வதாக அதிகாரிகள் அனைவரும் வேதனையை  வெளிப்படுத்துகின்றனர் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  உதவி இயக்குநர்கள் உத்தரவு இடவேண்டும் - ஒற்றர் ஓலை