என்ன செய்தி ஒற்றரே…
தலைவா ஒரே செய்தி தான்…அதி முக்கிய செய்தி…
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் அவர்களுக்கு முதன்மை உதவியாளராக வருவாய் துறையை சேர்ந்த சரவணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
துறையின் மூத்த அதிகாரிகள் சரவணமூர்த்தியை தொடர்பு கொண்டாலும் அலட்சிய படுத்துகிறாராம். பதவி உயர்வில் இஆப வாக வருவாய் துறையில் இருந்தே அதிமாக வருகிறார்கள். ஊரக வளர்ச்சித்துறையில் மிக குறைவு. அதனை சரியான விகிதாச்சார வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என நீதிமன்றம் சென்றுள்ளனர். அந்த வழக்கின் எதிர்மனுதாரராக உள்ள வருவாய் துறையை சேர்ந்த சரவணமூர்த்தி என்பவரே ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு முதன்மை உதவியாளராக நியமித்தது எப்படி சரியாகும் என அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர்.
இவை அனைத்திற்கும் முடிவு அமைச்சர் ஆனந்த் கையிலே உள்ளது.என உரக்க கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.























