ஓய்வு பெறுவோர் நிலை – ஒற்றர் ஓலை

என்னாச்சு ஒற்றரே…

ஊரக வளர்ச்சி துறையில் ஓய்வு பெற உள்ளவர்கள் தங்களது கடைசி நாட்களை கண்ணீரோடு கழித்து வருகின்றனர் தலைவா…

ஏன் ஒற்றரே…

அவர்கள் ஓயவு பெறுவதற்கு முடிவுக்கு வராத கோப்புகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த காலங்களில் ஓய்வு பெறுபவர்களின் நிலுவை கோப்புகள் அந்த மாதத்தில் 15ம் தேதிக்குள்ளாகவே இறுதி செய்யப்பட்டுவிடும்.

இப்போது என்ன நிலை ஒற்றரே…

தலைமை செயலகத்தில் செயலாளரின் மேஜையில் தேங்கி இருக்கிறது. இந்த மாதம் ஓய்வு பெற உள்ளவர்கள் செய்வது அறியாமல் திகைத்து உள்ளனர் தலைவா…

அய்யோ பாவமே…

ஆமாம் தலைவா…அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. துறையின் செயலாளர் இந்த விசயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் சில சங்கங்கள் போராட்ட களத்திற்கு செல்லும் என தெரிகிறது. ஊரக வளர்ச்சித் துறை முடங்கும் அபாயம் உள்ளது என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  உள்ளாட்சி தேர்தல் - இதுதான் சட்டம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்