பொதுமக்கள் கொண்டாடும் திட்ட இயக்குநர்

தென்காசி

மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன் அவர்களை பற்றி நம்மிடம் பேசிய பொதுமக்களின் எண்ணத் தொகுப்பே இந்த செய்தி.

திருநெல்வேலி மாவடத்தில் இருந்து தென்காசி மாவட்டம் உருவான பிறகு வந்த திட்ட இயக்குநர்களில் மக்களின் மனம் கவர்ந்தவராக சிவராமன் அவர்கள் விளங்கி வருகிறார்.

எந்த ஒரு சாதாரண பொமக்களும் திட்ட இயக்குநரை சந்தித்து தங்களின் குறையை கூறலாம். அவர்கள் சொல்வதில் நியாமான தேவை இருந்தால் உடனடியாக நிறைவேற்றி வைக்கிறார். பல ஆண்டுகளாக தீர்க்கபடாத பிரச்சனைகள் இவரின் கவனத்திற்கு தெரிய வந்த உடன் அதற்கான தீர்வு கிடைக்கிறது என்றனர் நம்மிடம் பேசியவர்கள்.

அதுபோல நமக்கும் ஒரு அனுபவம் கிடைத்தது. தென்காசி மாவட்டத்தில் கலைவர் கனவு வீடு திட்டத்தில் வீடு கட்டிவரும் சகோதரர் ஒருவருக்கு முதல் தவணை பணம் கூட வராத நிலை. இந்த விடையத்தை திட்ட இயக்குநரின் கவனத்திற்கு நமது ஊடகத்தின் சார்பாக கொண்டு சென்றோம்.

அதற்கான காரணத்தை கண்டறிந்து,அதனை கலைந்து உடனடியாக சம்மந்தப்பட்ட பயனாளிக்கு பணம் கிடைத்திட வழிவகை செய்தார். அந்த பயனாளி சகோதரர் நம்மிடம் சந்தோசத்தையும்,திட்ட இயக்குநருக்கு நன்றியையும் தெரிவித்தார்.

நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் தென்காசி மாவட்ட  திட்ட இயக்குநர் சிவராமன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Also Read  கொட்டகுடி ஊராடசி - இராமநாதபுரம் மாவட்டம்