அதிகார மையத்தில் குறிப்பிட்ட சமூகம்,திண்டுக்கல் ஒன்றிய வளர்ச்சித்துறை அவலம்- ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே சாதிய செய்தியா…

நாம் ஏற்கனவே பேசிய செய்தி தான் தலைவா..அரசின் அனைத்து துறைகளிலும் முதல்வரின் சைவ பிள்ளை சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகார மையமாக அமர்த்த முயற்சி நடப்பதாக கூறினோம் அல்லவா..அதுபோல,திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக திண்டுக்கல் ஒன்றியத்தில் உயர் அதிகாரிகளாக சைவ பிள்ளை சமூகத்தை கொண்டு வருவதற்கான வேலை நடந்து வருகிறதாம். விரைவில் அதற்கான உத்தரவு வெளிவர உள்ளதாக தகவல் தலைவா..

மாவட்ட ஆட்சியர் வசம் இந்த தகவல் சென்றதா ஒற்றரே…

இதுவரை இல்லை தலைவா…பொறியாளர் இடமாறுதலில் சில குழப்பங்கள் ஆட்சியருக்கு தெரிய வந்ததால் அந்த உத்தரவு நிறுத்தி வைப்பட்டதாம். அதுபோல, வெளிவர உள்ள உத்தரவின் உண்மை தன்மையை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் என ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர் திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி அலுவலர்கள் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஓவர் ஆட்டம் போடும் ஒன்றிய செயலாளர்கள் - ஒற்றர் ஓலை