ஊரக வளர்ச்சி துறையும்,இஆப அதிகாரிகளும் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…இஆப அதிகாரிகள் பற்றிய செய்தி ஊரக வளர்ச்சி துறையில் ஓயாது போலவே…

ஆமாம் தலைவா…அது பற்றி விரிவாக பேசிவிடலாம். முதலில், கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக நிர்ணகிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் இஆப அதிகாரிகளின் நியமனத்தால் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது.

உண்மைதானே ஒற்றரே…

இரண்டாவதாக முகமையில் பணிபுரிய மட்டுமே இஆப அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களை ஏன் மகளிர் திட்டத்தில் பணிபுரிய நியமிக்கப்படுவதில்லை என்ற கேள்வியை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர் தலைவா…

மிக நியாயமான கேள்வி தானே…மகளிர் திட்டத்தில் பணிபுரிவது என்ன மட்டமான செயலா ஒற்றரே…

இது அனைத்தையும் விட முக்கியமான செய்தி தலைவா…

என்ன ஒற்றரே…

குரூப்1 தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் பல்வேறு துறைகளை தேர்வு செய்கின்றனர். வருவாய் துறையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு பெற்று இஆப அதிகாரிகளாக உயர்வு பெற்று விடுகின்றனர்.ஆனால்,ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து இஆப பதவி உயர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை சொற்பமாக உள்ளது.

இதற்கு என்ன தீர்வு ஒற்றரே…

ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து ஆண்டுதோறும் இஆப அதிகாரிகளாக பதவி உயர்வில் செல்வதற்கான எண்ணிக்கை மற்றும் சரியான வழிமுறைகளை நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும்.மாற்றம் என்று ஆட்சிக்கு வந்துள்ளவர்களாவது இதனை செயல்படுத்த வேண்டும்.

Also Read  இருவருக்கு இடமாறுதலில் மாறுதல்,என்ன நடக்கிறது? - ஒற்றர் ஓலை

பொறுத்திருந்து பார்ப்போம் ஒற்றரே…

இன்றைய நிலையில. இஆப அதிகாரிகளாக உயர்வு பெறும் நிலையில. ஊரக வளர்ச்சி துறையில் கூடுதல் இயக்குநர்கள் சிலபேர் தகுதியோடு காத்து இருக்கிறார்களாம் தலைவா..

வேறு ஏதாவது தகவல் உண்டா ஒற்றரே…

கூடுதலாக ஒரே தகவல் தலைவா…முகமையில் பணிபுரியும் திட்ட இயக்குநர்களுக்கு முகாம் அலுவலகம் உள்ளதுபோல, மகளிர் திட்டத்தில. பணிபுரியும் திட்ட இயக்குநர்களுக்கும் மாவட்டம் தோறும் முகாம் அலுவகலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறதாம்.துறை அமைச்சர் ஆனந்த் அவர்கள் என்ன செய்ய போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.