என்ன ஒற்றரே…விடாது கருப்பு போல இடமாறுதல் செய்தி தொடருகிறதா…
ஆமாம் தலைவா…60க்கும் மேற்பட்ட திட்ட இயக்குநர்கள் இடமாறுதல் பற்றிய பல குளறுபடிகளை பேசினோம் அல்லவா. மீண்டும் ஒரு இடமாறுதல்.
என்ன ஒற்றரே…புதிய நபர்களுக்கா…
இல்லை தலைவா…இடமாறுதல் செய்யப்பட்ட 61 பேர்களில் இருவருக்கு மட்டும் அவர்களின் எண்ணப்படி இடமாறுதல் வந்துள்ளது.
தனி சலுகையா ஒற்றரே…

அப்படித்தான் தெரிகிறது…இடமாறுதல் செய்யப்பட்டவர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் விடுப்பில் சென்றுவிட்டனர்.ஆனால்,பணியில் சேர வேண்டும் இல்லையேல் பணியிடை நீக்கம் என மேலிடத்தில் இருந்து அதிரடியாக செய்தி சொல்கிறார்களாம்.
இந்த இருவருக்கும் மட்டும் தனி வழியா ஒற்றரே..
ஆமாம் தலைவா..இந்த உத்தரவு வந்ததும் அதை பற்றியே அனைத்து அதிகாரிகளும் பேசுகிறார்கள். சில பேர் நம்மிடம் அது கரூர் ரகசியம் என காதினில் சொன்னனர் என கூறிவிட்டு ரகசியம் பற்றி சொல்லாமல் மறைந்தார் ஒற்றர்.





















