கடும் நடவடிக்கை தேவை – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை

 ஊராட்சி செயலாளர் கொலை

தமிழ்நாடு ஊராட்சி செயலாஏர்கள் சங்கத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளரும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் வள்ளியூர் ஒன்றிய தலைவருமான திரு.S.சங்கர் அவர்கள் இன்று (03.02.2025) காலை அலுவலக பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது சில சமூக விரோதிகள் இடைமறித்து மிக கொடூரமாக படுகொலை செய்துள்ள நிகழ்வு மிகக் கண்டனத்துக்குரியதாகும். இந்த படுகொலையில் தொடர்புடைய அனைத்து உண்மையான குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டு துரித விசாரணை மேற்கொண்டு உரிய தண்டனையை பெற்றுத்தர தமிழக அரசினை மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் அரசு பணியாளர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சூழ்நிலையில் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதே அச்சமின்றி அரசு பணியை மேற்கொள்ள வழிவகுக்கும். மேலும் இராமநாதபுரத்தில் ஒரு ஊராட்சி செயலர் தாக்கப்பட்டபோதே ஊராட்சி செயலருக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என எங்கள் அமைப்பு கோரிக்கை வைத்தது. அது போன்ற வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தால் இன்று இப்படுகொலையை தடுத்திருக்க முடியும் என எங்கள் அமைப்பு கருதுகிறது. ஒரு

திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி செயலர் படுகொலையை கண்டித்து நாளை (04.02.2025) மாநிலம் முழுமைக்கும் ஊராட்சிகளில் கருப்புபட்டை அணிந்து ஊராட்சி செயலர்கள் பணிபுரிவார்கள். மேலும் குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மாநில அளவில் கடுமையான போராட்டத்தை இயக்கம் நடத்தும்.

Also Read  தனி அலுவலர் காலம் - அன்றாடப் பணிகள்- ஆணையரின் ஆணை தேவை

எனவே இதுபோன்ற கொடூர நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.