சம்பளம்
ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கு புதிய விதிமுறையின் படி, மாதத்தில் முதல் இணைய பரிவர்த்தனையே ஊழியர்களுக்கு ஊதியம் போடுவதே ஆகும். அதன்பிறகே, பிற செலவுக்கான பரிவர்தனை செய்ய முடியும்.
தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட 28 மாவட்டங்களில் சம்பளம் போடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஊராட்சி செயலாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் என மூன்று பேரின் ஓடிபியை பதிவிட்டால் மட்டுமே பரிவர்த்தனை நிறைவு பெறும்.
ஒன்றியம்
குறிப்பாக, ஒரு ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் இருக்கிறது என்றால். 40 ஊராட்சியின் சம்பளத்திற்கு பல தடவைகள் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தனித்தனியாக ஓடிபி வரும். அவரின் வேலைப் பளுக்கு நடுவில் இதனை செயல் படுத்துவது மிகவும் சிரமமான செயலாக உள்ளது.
இந்த மாதம் 3ம் தேதி வரை பெரும்பான்மையான மாவட்டங்களில் சம்பளம் போடவில்லை. இதற்கு சரியான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓடிபியோடு பரிவர்தனை முழுமை பெறும் வகையில் இணைய செயல்பாட்டை மாற்றி அமைக்கவேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறையில் படிப்படியாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள், ஊழியர்களின் ஊதிய விடயத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவார் என அனைத்து கடைநிலை ஊழியர்களும் நம்புகிறார்கள்.
ஊராட்சி செயலாளர்களுக்கு ஒன்றிய நிதியில் ஊதியம் அல்லது கருவூலம் மூலம் சம்பளம் என அனைத்து சங்கங்களும் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்துவருகின்றன.