ஊராட்சிகளில் இணைய வரி வசூலில் காலக்கெடு- ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…என்ன தகவல்.

ஊராட்சிகளில் வீட்டு வரி உட்பட அனைத்துவரிகளும் இணைய வழியே செலுத்துவதற்கு வழிவகை உள்ளது.அதில் ஒரு சிக்கல் உள்ளதாம் தலைவா.

என்ன சிக்கல் ஒற்றரே…

வரி கட்டுவதற்கான இறுதி தேதி நிர்ணகிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலம் கடந்து கட்டுவதற்கான அபராத தொகையும் நிர்ணகிக்கவில்லை.வரி செலுத்தாதவர்களை ஊராட்சி செயலாளர்கள் நேரில் சென்று கேட்டாலும்,இணையவழியே செலுத்திவிடுகிறோம் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

இதற்கு என்ன தீர்வு ஒற்றரே…

வரி செலுத்துவதற்கான இறுதி நாளை இணைய தளத்தில் ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு செலுத்துபவர்களுக்கு அபராதத் தொகையும் சேர்த்து செலுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். அபோதுதான் முழுமையாக வசூலாகும் தலைவா..

இந்த செய்தி சம்மந்தப்பட்ட அதிகாரி அவர்களுக்கு சென்று சேரட்டும் ஒற்றரே..

ஆமாம் தலைவா…இணைய வழியே வரி செலுத்துவதில் இந்த மாற்றத்தை கொண்டுவந்தால் மட்டுமே வரிவசூல் இறுதி பெறும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  பயிற்சி முடித்த 7 பேர் உதவி இயக்குநராக பதவி ஏற்பு