திண்டாட்ட நிலையில் திட்ட இயக்குநர்கள் -ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…அதிர்ச்சிகரமான செய்தியா..

ஆமாம் தலைவா…சமீபத்தில் ஊரக வளர்ச்சி துறையில் மிகப்பெரிய இடமாறுதல் நடந்தது அல்லவா..

அதான் தெரியுமே ஒற்றரே…நாம கூட இடமாறுதலும் குழப்பங்களும் என பேசினோமே..

ஆமாம் தலைவா…தென்மாவட்டத்தில் பணிபுரிந்தவர்களை வடக்கே மாறுதல் செய்தனர். குழந்தைகளின் படிப்பு,குடும்ப சூழ்நிலை என பல திட்ட இயக்குநர்கள் திண்டாடி வருகின்றனர்.பலர் விடுப்பு எடுக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர்.

துறைரீதியாக இடமாறுதல் என்பது நடைமுறைதானே ஒற்றரே…

நடைமுறை தான் தலைவா…இவ்வளவு பெரிய இடமாறுதல் இதுவரை நடந்தது இல்லை. பல திட்ட இயக்குநர்கள் பழி வாங்கப்பட்டுள்ளதாக பேசி வருகின்றனர். சில அதிகாரிகளுக்கு மட்டும் கேட்ட இடம் கிடைத்ததால் ஆனந்தம் கொண்டுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட சங்கம் கூட அதிருப்தி தெரிவித்ததே..

அந்த சங்கத்தின் லெட்டர் பேடை வேறு யாரோ பயன்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.ஆனால்,அதில் உள்ள செய்தி அனைத்தும் உண்மை என்கின்றனர்.கோப்பில் கூட கையெழுத்திட தயங்கும் நபர்களை மகளிர் திட்டத்தில் இருந்து ரெகுலருக்கு மாற்றி உள்ளனர். மக்களுக்கான திட்டத்தை இவர்கள் எப்படி செயல்படுத்துவார்கள். இதனால், ஆளும்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என உறுதியாக கூறுகின்றனர்.

வேறு தகவல் உண்டா ஒற்றரே….

முக்கியமான செய்தி தலைவா…திட்ட இயக்குநர் உரிமையை மீட்டெடுக்க தங்களுக்கான சங்கத்தை புதுப்பிக்க தயாராகி வருகின்றனராம். விரைவில் அனைவரும் ஒன்றுகூடி அமைச்சர் ஆனந்த் அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  உதவி இயக்குநர்கள் Vs உதவி இயக்குநர்கள் - ஒற்றர் ஓலை