ஊரகவளர்ச்சி துறையில் ஐஏஎஸ் மயம்

திட்ட இயக்குநர்

இன்று வெளிவந்துள்ள அரசாணையால் ஊரக வளர்ச்சி துறையில் மிக பெரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது. பல திட்ட இயக்குநர்கள் பணியிடங்களுக்கு  இஆப அதிகாரிகளை நியமித்து உள்ளனர்.

ஊரக வளர்ச்சித் துறையில் பதவி உயர்வில் வருபவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.மொத்தத்தில் ஊரக வளர்ச்சித்துறையை சிதைக்கும் பணியை செய்வனே செய்துள்ளது தமிழக அரசு.

கடந்த காலங்களில் ஊரக வளர்ச்சி துறையில் இஆப பணியிடங்களை குறைத்து ஊரக வளர்ச்சி துறையில் பணி உயர்வில் வந்தவர்களை திட்ட இயக்குநராக நியபிக்கப்பட்டனர்.

இன்று ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் நிலை கேள்வி குறியாகிவிட்டது.

ஒரு உச்ச அதிகாரி ஊரக வளர்ச்சித் துறையை பாதுகாத்து வந்தார். இன்று அவர் இல்லாததால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் நிலை கேள்விக்குறியாகி விட்டது.

Also Read  தனி அலுவலர் காலத்தில் இப்படி ஒரு பிடிஓவா! - ஒற்றர் ஓலை