உள்ளாட்சி தேர்தலில் இவிஎம் இயந்திரம் -ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…உள்ளாட்சியிலுமா இவிஎம்

ஆமாம் தலைவா…வாக்கு பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்த நாடுகள் கூட வாக்கு சீட்டிற்கு சென்று விட்டன.நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மீதே பலர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இவிஎம் என்பது தேவையில்லாத ஆணி.

ஆமாம் ஒற்றரே…வார்டு உறுப்பினர் தொடங்கி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வரை கிராமப்புற வாக்காளர்கள் 4 ஒட்டுகள் போடுவதற்கு வசதியாக மல்டி லெவல் ஓட்டிங் மிசின்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வாங்கி உள்ளதாம்.

ஆமாம் தலைவா…இவிஎம் இல்லாமல் தவெக அரசு உள்ளாட்சி தேர்தலை உறுதியாக சந்திக்காது. மக்களின் மனநிலையை உளவுத்துறை ஆளும் தலைமைக்கு தெரிவித்துவிட்டனர் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

 

Also Read  பாவம் பிடிஓ...மனது வைப்பாரா சின்னவர்?