பாவம் பிடிஓ…மனது வைப்பாரா சின்னவர்?

உதயநிதி

சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அப்போது நடந்த ஆய்வில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உண்மை என்ன?

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது அம்மாபட்டி ஊராட்சி ஆகும். இப்போது ஊராட்சி தலைவராக இருப்பவர் திமுகவை சார்ந்தவராம். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அதிமுகவை சார்ந்தவராம். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் இடத்திற்கு அருகே தான் புதர்மண்டி உள்ளது. நடவடிக்கை எடுக்கச் சொல்லி பல மனுக்களை அளித்தள்ளார்.

சமீபத்தில் மழை பெய்ததால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால்,புதரை அகற்றும் பணியை செய்யமுடியாத நிலை உள்ளதாக நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பிடிஓ சோமதாஸ் செய்த தவறு, அமைச்சர் உதயநிநி கேள்வி கேட்ட உடன் பதட்டத்தில் பணி முடிந்துவிட்டதாக உளறி கொட்டியது தான். அதற்கு பணியிடை நீக்கம் என்பது மிகப்பெரிய தண்டனை என்கின்றனர் பிடிஓ சார்ந்த சங்க நிர்வாகிகள்.

இந்நாள், முன்னாள் ஊராட்சி தலைவர்களின் அரசியலுக்கு பலிகடா ஆகிவிட்டார் பிடிஓ.

Also Read  அரியூர் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை அமைச்சர் உதயநிதி வழங்கி உத்தரவு இடுவார் என ஊரக வளர்ச்சி சங்கத்தினர் நம்பிக்கையுடன் நம்மிடம் சொன்னார்கள்.

செய்வாரா சின்னவர்….