உள்ளாட்சி தேர்தல் – நடக்குமா?நடக்காதா?

உள்ளாட்சி தேர்தல்

வரும் டிசம்பர் மாதத்துடன் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு பதவி காலம் முடிகிறது. அப்படியெனில்,  தேர்தலுக்கான வேலைகளை செப்டம்பரில் தொடங்கினால் தான் டிசம்பரில் தேர்தலை நடத்த முடியும்.

பணிகள் தொடங்கியதா?

தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதா என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.

வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார் செய்ய உத்திரவு இடப்பட்டுள்ளது என்று நமட்டு சிரிப்பு சிரித்தனர். அதற்கான அர்த்தத்தை மற்றொரு அதிகாரி விளக்கினார். அதாவது, மாநகராட்சியில் இணைய உள்ள ஊராட்சிகளை வரண்படுத்தி, வார்டுகளை வரைமுறை படுத்துவதற்கே கால அவகாசம் வேண்டும். பல ஊராட்சிகளை மாநகராட்சிகளோடு இணைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் எதிர்ப்பையும் மீறி இணைத்தால் அது ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்பக்கூடிய நிலையே உள்ளது. குறிப்பாக, அமைச்சர்கள் நேரு மற்றும் பெரியசாமி மாவட்ட்களிலேயே கடும் எதிர்ப்பு உள்ளது.

வாக்குசீட்டும்,இயந்திரமும்

ஊராட்சிகளின் தேர்தலுக்கு வாக்கு சீட்டுக்கள் அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான உத்தரவு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.

பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்திட சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய வாக்களர்கள் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம்திடம் கேட்டுப் பெறவேண்டும்.அதற்கான பணியை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டதாக செய்திகள் தெரிக்கின்றது.

Also Read  ஊரக அனைத்து பணியாளர் சங்க மாநாடு-திருவண்ணாமலை

நடக்குமா…நடக்காதா…

27 மாவட்டங்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதா என ஆளும்வர்க்கத்திடமும், மூத்த பத்திரிகையாளர்களிடமும் பேசினோம்.நமக்கு கிடைத்த தகவல்கள்….

தற்போது தேர்தல் நடந்தால் திமுவிற்கு சாதகமாக அமைவது கடினம்.ஒன்றிய கவுன்சிலருக்கு ஐந்தாயிரம் வாக்குகளுக்குள் தான் தேர்தல். கட்சி சின்னத்தை விட, தனிநபர் செல்வாக்கு முக்கியமாக இருக்கும். திமுக ஆட்சியின் மேல் உள்ள அதிருப்தி வாக்குகளும்,கட்சிசாராத வாக்குகளும் வலிமையான எதிர்தரப்பு வேட்பாளருக்கே செல்வதற்கு அதி வாய்ப்பு உள்ளது.

மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலில் மட்டும் திமுக வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அமையலாம்.

பேரூராட்சி,நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கும் 5ஆயிரம் வாக்குகுகளே என்பதால், அந்த தேர்தலிலும் திமுகவிற்கு பின்னடைவே ஏற்படும். அதற்கு மின்சார கட்டண உயர்வு உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன என்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

ஊரக மற்றும் நகராட்சி துறைகளை இணைத்து உள்ளாட்சி துறையாக மாற்றி,அந்த துறைக்கு உதயநிதியை அமைச்சராக்கி, அவர் சில காலம் செயல்பட்ட பிறகு தேர்தலை நடத்துவதுதான் தலைமையின் திட்டமாக உள்ளது என்றார் ஆளும்கட்சிக்கு மிக நெருக்கமான ஊடகவியளாளர் ஒருவர்.

இறுதியாக…

நடக்கும், ஆனா..நடக்காது என்று திரைப்படத்தில் என்னத்த கன்னையா சொல்லும் வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.