ஊரக வளர்ச்சித்துறை
மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சிகளின் பங்கே ஜனநாயகத்தின் முதுகெழும்பு. தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி செயலாளர்களின் பங்கு மிக முக்கியமாகும். ஒரு ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்து பத்தாண்டுகள், மற்றொருவர் இருபது ஆண்டுகள் ஆனாலும் இருவருக்கும் ஒரே சம்பளம். இந்த நிலையை மாற்றி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு பிறகு சிறப்பு நிலை சம்பள உயர்வு வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் அடிப்படைவரை அறிந்தவர் ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநர் பொன்னையா இஆப அவர்கள். அவரின் காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு நல்ல விடயங்கள் நடந்து வருகிறது. நாமும் அதுபற்றி ஏற்கனவே செய்தி வெளியிட்டு உள்ளோம்.
ஊராட்சி நிர்வாகத்தின் ஆணி வேராக உள்ள ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடிப்பார் இயக்குநர் என நாமும் எதிர்பார்க்கிறோம்.