ஊரக வளர்ச்சித்துறை உச்ச அதிகாரி மீது அதிருப்தி – ஒற்றர் ஓலை

ஊரக வளர்ச்சித்துறை

நமது ஒற்றர் அறிந்து வந்து சொன்ன செய்தியின் தொகுப்பு

துறையின் உச்ச அதிகாரியாக பதவி ஏற்ற பிறகு தினம் ஒரு் ஆலோசனை கூட்டம் நடத்துகிறாராம். அதுவும் ஊராட்சி செயலாளர்களுடன் நேரடியாக காணொளியில் பேசுகிறாராம்.

இதனால் அன்றாட பணிகளை கூட அதிகாரிகளால் செய்ய முடியாது தவித்து வருவதாக ஒன்றிய அதிகாரி ஒருவர் குமுறி உள்ளாராம்.

வேலுநாச்சியார் மாவட்டத்தில்  இடைநீக்கம் செய்யப்பட்ட ஒன்றிய அதிகாரிக்கு மீண்டும் பணி விரைவில் வழங்கப்படுமாம். அதே மாவட்டத்தில் ஒரு ஒன்றிய அதிகாரி தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதாக ஊராட்சி பணியாளர்கள் கண்ணீர் விடுகின்றனராம்.

நெல்லை மாவட்ட பெண் அதிகாரியின் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறதாம். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். யாராலும் தன்னை அசைக்க முடியாது என ஆணவத்தில் கொக்கரிக்கிறாராம் அந்த மாவட்ட அதிகாரி.

பூட்டு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரின் உதவியாளரின் அடாவடியை சகிக்க முடியவில்லை என்கின்றனர்.. ஒன்றிய அதிகாரியாக உள்ள அவர், அமைச்சரின் பெயரை சொல்லி பல உயர் அதிகாரிகளை மிரட்டுகிறாராம்.

மேற்கண்ட தகவல்களை சொல்லிவிட்டு மயமாய் மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் - ஒற்றர் ஓலை