தமிழ்நாடு
காக்கும் கரங்கள் நிதி உதவி
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஒன்றிய ஊராட்சி செயலரும்,TNPSA அமைப்பின் மாநில துணைச்செயலாளருமான பாசமிகு சகோதரர் திரு.K.P.கார்த்திக்கேயன் அவர்கள் சாலை விபத்து காரணமாக கடந்த மாதம் இறப்பினை எய்திய நிலையில் “காக்கும் கரங்கள்” குழுவின் நிரந்தர உறுப்பினரான அவரது குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி ரூ 500000(ஐந்து லட்சம்) TNPSA மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையிலும்,புதுக்கோட்டை மாவட்ட தலைவர் திரு.V.ஜெகநாதன் மற்றும் மாவட்ட பொருளாளர் திரு.K.நாகராஜ் அவர்கள் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் திரு.மேக.இளங்கோவன்,தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் திரு.G.கண்ணன்,சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.A.பாக்கியராஜ்,தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.ஆனந்தன்,தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.M.ராமதாஸ்,மாநில செயற்குழு உறுப்பினர் திரு.M.தங்கராஜ்,முன்னாள் மாவட்ட பொருளாளர் G.கார்த்திக்கேயன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த சங்கத்தினரின் செயலை நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் நன்றிகள்.






























