கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் படுகொலை

கடும் கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சாங்கியம் ஊராட்சி செயலர் அன்புசகோதரர் திரு.அய்யனார் அவர்கள் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியூட்டுகிறது.

இச்செயலுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது..சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக காவல்துறை கைது செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது..

இச்செயலை கண்டித்து மாவட்ட மையம் சார்பில் திருக்கோவிலூரில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

-மாநில மையம்
TNPSA-பேரமைப்பு

Also Read  சிவகங்கையில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் கொண்டாட்டம்