என்ன புதிர் செய்தி ஒற்றரே….
திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள பழனி ஆண்டவரின் பெயர் கொண்ட ஒருவர் அமைச்சரின் உதவியாளராக உள்ளார் தலைவா…
எல்லா அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த உதவியாளர் உண்டு தானே ஒற்றரே…
இருப்பார்கள் தலைவா…ஆனா, இவரு திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் உதவியாளராக செயல்படுவதாக கூறுகிறார்கள்.மாவட்டத்தில் எது நடந்தாலும் இவர் உத்தரவு இட வேண்டுமாம். பிடிஒ லெவல் அதிகாரி மாவட்டத்தின் உச்ச அதிகாரிகளுக்கு உத்தரவு இடுவதாக மாவட்ட முழுவதும் பேச்சாக உள்ளது.
அப்படின்னா அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளார்களா ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஆட்சி மாற்றம் வரட்டும் அதன்பிறகு பார்த்து கொள்வதாக பெரும்பான்மை அதிகாரிகள் அவர்களுக்குள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.ஊராட்சி செயலாளர்கள் முதல் ஒன்றிய அளவில் அதிகாரிகள் வரை இடமாறுதலில் இவர் சொல்வது தான் நடக்க வேண்டுமாம். திண்டுக்கல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக(ஊராட்சி) இவரே வந்து அமர்ந்து விட்டார்.
அவ்வளவு தானா ஒற்றரே….
ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிய உச்சபட்ச உதவியாளர்களை எல்லாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். பல அமைச்சர்கள் பெரும் சிக்கலில் மாட்டியதே உதவியாளர்களால் தான் என எச்சரிக்கை விடுத்து மறைந்தார் ஒற்றர்.