ஊராட்சி செயலாளர் இடமாறுதல் ,,,ஆணையை மீறும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…ஒரே தொடர் கதையாக போகிறதே இந்த காரியம்.

ஆமாம் தலைவா…கவுன்சிலிங் முறையில் மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாறுதல் என பல ஆண்டு கோரிக்கையை ஏற்று ஆணையர்  ஆணை இட்டது தெரியும் தானே.

அனைவரும் அறிந்த உத்தரவு தானே ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஆனா, அந்தந்த மாவட்ட அமைச்சர்,ஆளும் கட்சி பிரமுகர்கள் என பலரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து குறிப்பிட்ட ஊராட்சி செயலாளர்களை மாற்றுவது தொடர்கதையாகி வருகிறது.

தமிழ்நாடு முழுவதுமா ஒற்றரே…

ஆமாம் தலைவா…அதிலும் சிவகங்கை மாவட்டத்தில் சில ஒன்றியங்களில் ஆளும் கட்சியினரின் அத்துமீறல் அதிகமாக உள்ளதாக புலம்பல் சப்தம் கேட்கிறது. அமைச்சர் பெயரை சொல்லி சில அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு இடமாறுதல் செய்யும் காரியமும் நடக்கிறதாம்.

இதற்கு என்ன தீர்வு ஒற்றரே…

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெறலாம் என தெரிகிறது. ஏற்கனவே, காவல் மரணம்,பள்ளி சிறுவன் மரணம் என சிவகங்கை மாவட்டம் சிக்கலில் சிக்கி இருக்கும் நிலையில் இது கூடுதல் பிரச்சனை என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  கட்டனூர் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்