கண்டனம்
*தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுரை நல்.செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் தங்களது பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இன்று(02.07.2025) முதல் திண்டுக்கல்லில் மாநில அளவிலான தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அறிவிப்பு செய்திருந்த நிலையில்,இரவோடு இரவாக மாநிலம் முழுமைக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது!*
*திமுக ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என அரை நிர்வாணப்போராட்டம்,பிச்சையெடுக்கும் போராட்டம் என எத்தனையோ எண்ணிலடங்கா போராட்டங்களை நடத்தியும் ஒரு பயனும் இல்லாத நிலையில் கடைசி முயற்சியாக காத்திருப்பு போராட்டம் நடத்த முயற்சித்தும் அதனையும் ஒடுக்கும்விதமாக காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது!*
*அறவழிப்போராட்டங்களை நடத்தினால் கைது,வழக்கு என ஒடுக்குமுறைகளை கையாளுவது ஏற்கதக்கதல்ல..*
*காவல்துறை உடனடியாக வீட்டுக்காவலில் வைத்துள்ள சங்க நிர்வாகிகளை விடுவித்து அறவழியில் போராட்டம் நடத்திட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்!*
அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்,மாநில தலைவர்-TNPSA