மாற்றத்தை கொண்டுவரும் துறையின் செயலாளர்

ககன்தீப்சிங் பேடி

சுனாமி களத்தில் சுழன்று பணியாற்றியதால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்திய ஆட்சி பணியாளர் பேடி அவர்கள்.

2004ல் சுனாமி பேரிடர், 2015 கடலூர் புயல் பாதிப்புகள், 2018 கஜா புயல் போன்ற காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சிறப்பாக கையாண்டவர்.  திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

ஊரக வளர்ச்சித்துறைக்கு செயலாளராக வந்த பிறகு, பல மாற்றங்களை செய்து வருவதாக அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர்.

மாதந்தோறும் ஆய்வு

மாதந்தோறும் அனைத்து மாவட்ட அதிகாரிகளையும் சென்னைக்கு அழைத்து ஆய்வு கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்.

ஆய்வு கூட்டத்திற்கு வருவதற்கு அனைத்து திட்டங்களின் தற்போதைய நிலைகளை சமர்பிக்க வேண்டி உள்ளதால், அனைத்து திட்ட பணிகளும் விரைந்து முடிப்பதற்காக சம்மந்தப்பட்ட அனைவரும் சிறப்பாக பணி செய்தே ஆகவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்.

காணொளி காட்சி மூலமாக ஊராட்சி செயலாளர்களிடம் ஆய்வு கூட்டம் நடத்திய  துறையின் செயலாளர் பேடி மட்டுமே என நம்மிடம் கூறினார் ஒரு மாவட்ட அதிகாரி.

ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளர் ககன்தீப்சிங் பேடி வேகத்திற்கு ஈடுகொடுத்து சிறப்பாக துறையின் இயக்குநர் பொன்னையா அவர்களும் செயல்பட்டு வருகிறார். இருவருக்கும் கெமிஸ்டி நன்றாக ஒர்க்கவுட் ஆகிறது என்றனர் பனகல் மாளிகை அதிகாரிகள்.

கூடுதல் செய்தி– துறையில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் அரங்கேற போகிறது என்றனர் தலைமை செயலக அலுவலர்கள்.

Also Read  நடியப்பட்டு ஊராட்சி - கடலூர் மாவட்டம்