SNA கணக்கு
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளுக்கும் தனிப்பட்ட வங்கி கணக்குகள் அந்தந்த ஊராட்சிகளுக்கு அருகில் உள்ள வங்கிகளில் வைத்திருந்தன.
ஒற்றை கணக்கு முறையில் 12525 ஊராட்சிகளுக்கும் சென்னையில் இந்திய வங்கியில் தனித்தனியே கணக்கு துவங்கப்பட்டு, ஒற்றை கணக்காக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
அதற்காக tnpass என இணைய தளம் உருவாக்கப்பட்டு, அதன் மூலமாக ஊராட்சியின் வரவினமாக உள்ள வரிகள், கட்டிட அனுமதி என அனைத்தும் செலுத்தும் வசதி செய்யப்பட்டன.
எங்கே போகிறது?
தென்மண்டலத்தில் ஒரு மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர் நம்மிடம் பேசியபோது, எங்களது ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக கட்டப்பட்ட தொகை எந்த கணக்கில் வரவாகிறது என தெரியவில்லை. இதுவரை, மூன்று லட்சம் ரூபாய் வரை செலுத்தி விட்டார்கள்.
நாங்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுவாக அளித்துவிட்டோம். எங்களின் பதவி காலம் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையப்போகிறது. எங்கள் ஊராட்சிக்கு சொந்தமான பணம் எந்த கணக்கில் வரவாகி உள்ளது என கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
எங்கள் சங்கத்தின் நிர்வாகியிடம் பேசினால், இதுபோல நூற்றுக்கணக்கான ஊராட்சிகளின் கோடிக்கணக்கான பணம் எங்கு போனது என தெரியவில்லை. இதுபோல பாதிக்கப்பட்டுள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை, எவ் வளவு தொகை என கணக்கிட்டு வருவதாக கூறினார் என்றார் நம்மிடம்.
ஊராட்சியின் அன்றாட தேவைகளுக்கு பயன்பட வேண்டிய பணம் எங்கே போனது என்றே தெரியாமல் தவிக்கும் நிலைக்கு என்ன முடிவு? இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணவேண்டியது மிக அவசியம்.