சிவகங்கையில் போஸ்டர் யுத்தம் – எப்போது முடிவுக்கு வரும்?

ஊரக வளர்ச்சித்துறை

துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட சங்கங்களின் சண்டையால் நடுநிலையான ஊழியர்கள் மனம் வெதும்பி போய் உள்ளனர்.

நம்மிடம் தங்களது மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்தனர்.  சிவகங்கை மாவட்ட  ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள  சங்கங்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என போட்டி போடுகின்றனர்.

அரசங்கத்தோடு போராடி வென்றெடுக்க வேண்டிய பிரச்சனைகள், உரிமைகள் பல உள்ளன.

சமீபத்தில் கூட, துணை முதல்வர் ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இது மிக அதிகபட்ச தண்டனை என்று,அவருக்காக எந்த சங்கமும் அதனை எதிர்த்து கண்டன சுவரொட்டியோ, ஒரு அறிக்கையோ கூட வெளியிடவில்லை.

ஆளும் அதிகாரத்தை எதிர்த்து ஊழியர்களுக்காக போராட வேண்டியதை விட்டுவிட்டு, ஒருவருக்கொருவர் சங்கங்களுக்குள் சண்டை போடுவது வேதனையாக உள்ளது.

யார் யார் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுவரொட்டி போர் என்பது பெரும் அக்கபோராக உள்ளது என்றனர்.

முந்தைய செய்தி:- https://tnpanchayat.com/why-the-division-among-employees/

Also Read  ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்