ஊழியர்களுக்குள் பிரிவினை ஏன்? – சிவகங்கை சிக்கல்

பிரிவு உபச்சார விழா

சிவகங்கை மாவட்டத்தில் திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணிமாறுதலில் செல்லும் ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு நடந்த விழாவில் தான் உள்குத்து நடந்ததாக ஊரக வளர்ச்சித்துறையின் ஒரு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அனைவரிடம் அன்பாக பணியாற்றி, வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி செல்பவருக்கு நடந்த பிரிவு உபச்சார விழாவில் ஒரு சங்கத்தினருக்கும் மட்டும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, மற்ற சங்கம் புறந்தள்ளப்பட்டதாம்.

அதற்கு காரணம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) அன்பு அவர்கள் தான் என கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளர்களின் இடமாறுதல் விசயத்திலும் இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறுகின்றனர்.

அனைவருக்கும் பொதுவான ஒருவருக்கு நடந்த விழாவில் ஓரவஞ்சனையாக செயல்பட்டதை மற்ற ஊழியர் சங்கத்தினர் கண்டிப்பது நியாயமாகவே படுகிறது.

Also Read  டி.புளியங்குளம் ஊராட்சி